- ஆடி திருவிழா
- மாத்தூர் கோவில்
- சக்தி மாரியம்மன் கோவில்
- மாத்தூர் எம்.எம்.டி.ஏ.
- திமிதி விழா
- மாத்தூர் கோவில் ஆடி திருவிழா
திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏவில் உள்ள சர்வ சக்தி மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் அதிகமாக வந்து வழிபடும் இந்த கோயிலில் 23ம் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஆராதனை, அபிஷேகம் செய்யப்பட்டது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, பகுதிச் செயலாளர் புழல் நாராயணன், கவுன்சிலர் காசிநாதன், நிர்வாகிகள் தாமரைச்செல்வன், கார்த்திக் ஆகியோர் பக்தர்களுக்கு கூழ்வார்த்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
The post மாத்தூர் கோயிலில் ஆடி திருவிழா appeared first on Dinakaran.