×

கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை கூட்டம்; 1995ல் இருந்த சந்திரபாபு நாயுடுவை பார்ப்பீர்கள்: அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை முதல்வர் பவன்கல்யாண், மாநில அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள், எஸ்பிகளுடன் அந்தந்த மாவட்டம் வாரியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கடந்த 5 ஆண்டில் ஆந்திராவை அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளில் சீரழிவு செய்து 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுள்ளனர். விஷன் 2047 எனும் தொலைநோக்கு பார்வையுடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

வரும் நாட்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனது பணிகள் இருக்கும். நான் பணி செய்வதுடன் உங்களையும் பணி செய்ய வைப்பேன். நான் செல்லும் இடங்களில் மக்கள் தெரியாமல் இருக்க திரைகள் தொங்கவிடுவதும், மரங்களை வெட்டுவதும் கூடாது. 1995ல் இருந்த சந்திரபாபு நாயுடுவை பார்ப்பீர்கள். இன்னும் அந்த வேகத்தை நீங்கள் எட்டவில்லை. விரைவில் திடீர் சோதனைக்கு வருவேன். அன்று அமைச்சர்களும் அதிகாரிகளும் ஓடினர். நாங்கள் வேலை செய்வோம், உங்களையும் வேலை செய்ய வைப்போம். அனைத்து துறைகளிலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

The post கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை கூட்டம்; 1995ல் இருந்த சந்திரபாபு நாயுடுவை பார்ப்பீர்கள்: அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Andhra CM ,Tirumala ,Secretariat ,Amaravati, Andhra Pradesh ,Chief Minister ,Deputy ,Pawan Kalyan ,
× RELATED ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக...