×

கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் ஆய்வு

அண்ணா நகர்: கோயம்பேடு வளாகத்தில் பழம், பூ, காய்கறி மற்றும் உணவு தானியம் மார்க்கெட்டுகள் தனித்தனியாக செயல்படுகிறது. இந்நிலையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தினசரி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல் மார்க்கெட் வளாகத்தில் குப்பை சேராதபடி பொக்லைன் இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் நடப்பதை நேரில் ஆய்வு செய்வதற்கு கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக குழு முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்கள் பணிகள் பற்றி கேட்டறிந்து மழை பெய்தால் வெள்ளம் சூழ்ந்து வியாபாரிகள் பாதிக்கப்பட கூடாது என்றார். பின்னர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய்கள் கட்டுமான பணிகளையும், ராட்சத மோட்டார்கள் தயாராக உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu Market ,Anna Nagar ,Koyambedu ,
× RELATED நாளை ஓணம் பண்டிகை; கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது