×

நெல்லை மாநகராட்சியை சென்னைக்கு சரிசமமாக உயர்த்துவேன்: மேயர் ராமகிருஷ்ணன்

நெல்லை: நெல்லை மாநகராட்சியை சென்னைக்கு சரிசமமாக உயர்த்துவேன் என நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்வாகியுள்ள ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சைக்கிளில் செல்லும் சாதாரண ஒரு தொண்டனை நெல்லை மேயராக ஆக்கியிருக்கிறார்கள். எனக்கு வாக்காளிக்காத மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய சகோதரர்கள் தான் என எண்ணி 55 வார்டுகளும் என்னுடைய வார்டாக நினைத்து பணியாற்றுவேன். 45 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வந்த சாதாரண தொண்டனை மாநகராட்சி மேயராக ஆக்கியுள்ளனர். 24 மணி நேரமும், 55 வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர், சாலை, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவேன் என்று கூறினார்.

The post நெல்லை மாநகராட்சியை சென்னைக்கு சரிசமமாக உயர்த்துவேன்: மேயர் ராமகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Nella Corporation ,Chennai ,Mayor ,Ramakrishnan ,Nellai ,Nellai Corporation ,Nell ,
× RELATED கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு...