×

மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது

 

மதுரை, ஆக. 5: மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகம் ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இந்த அலுவலகத்தில், பொதுமக்களுக்கான குறைதீர் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நாளை (ஆக. 6) நடைபெறுகிறது.  இதில் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும் இந்த முகாமில் ஆனையூர், பார்க்டவுண், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர்,

பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சௌராஷ்ட்ராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதில் உள்ள சாலை, தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளித்து தீர்வு காணலாம். இத்தகவலை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : East ,Zone ,Grievance ,Camp ,Madurai Corporation ,Madurai ,East Zonal Office ,Anayur Bus Stand ,Mayor ,Indrani Ponvasant ,Zone Grievance ,Dinakaran ,
× RELATED கிழக்கு தாம்பரத்தில் நாட்டு...