சென்னை: கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வரும் நம் திராவிட மாடல் அரசு, அதில் சாதனை படைப்போருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில் 2023 – 2024ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சிபெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, கவுரவித்தோம்.
மேலும் சர்வதேச – தேசிய – மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்துள்ள நம் தமிழ்நாட்டு பள்ளி மாணவச் செல்வங்களையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி மகிழ்ந்தேன். அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் நம் அரசு துணை நிற்கும் என உரையாற்றியுள்ளார். பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள அனைவரும் தொடர்ந்து சாதிக்க என் அன்பும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்
The post கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வருகிறது திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.