×

பொறியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கோரிக்கை

காரைக்கால், ஆக.4: புதுச்சேரியில், காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு இளைஞர்கள் தயாராகும் வகையில் சிறந்த வல்லுனர்களை சிறப்பு பயிற்சி முகாம் நடத்த வேண்டும் மக்கள் நல கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காரைக்கால் மக்கள் நலக் கழகம் தலைவர் சிதம்பரநாதன் புதுச்சேரி கொடுமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 99 இளநிலை பொறியாளர்கள், 69 ஓவர்சீர்களுக்கான போட்டித்தேர்வுகள் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கண்ட போட்டித்தேர்விற்கு காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தயாராகும் வகையில் சிறந்த வல்லுனர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வகுப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பொறியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puducherry ,People's Welfare Association ,Karaikal People's Welfare Association ,President ,Chidambaranathan ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...