கரூர், ஆக.4: அட்மா திட்டத்தின் கீழ் தாந்தோணி வட்டாரம் மூக்கனாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை திட்டம் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. விதை மற்றும் உரங்கள் இருப்பு விபரம் குறித்தும், மாநிலத் திட்டங்கள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குனர் காதர் முகைதீன் விளக்கம் அளித்தார். சொட்டுநீர் பாசனம் குறித்தும், வேளாண்மை துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், மூக்கணாங்குறிச்சி வருவாய் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானிய திட்டங்கள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் போலீஸ் எல்சன்,அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி நோய் கட்டுப்படுத்த பூச்சி விரட்டி தயாரிப்பது மற்றும் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வருமானத்தை பெருக்குவது குறித்து வேட்டமங்கலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பெரியசாமி விளக்கம் அளித்தார். முடிவில் ஆத்மா திட்ட செயல்பாடுகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஷர்மிளா எடுத்துரைத்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post தாந்தோணி ஒன்றியத்தில் இயற்கை வேளாண் பயிற்சி appeared first on Dinakaran.