×

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்த கையெழுத்து இயக்கம்

வால்பாறை : வால்பாறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தி வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் பெண்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். காவல்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்டுள்ள செல்போன் செயலிகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் கற்பகம் பேசியதாவது:பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கையெழுத்து இயக்கத்தின் நோக்கம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குடும்ப முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, தாய்மார்கள் வருங்கால தலைமுறைக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு பெற்றோர்களை சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, வீடுகளில் இருந்து தொடங்கவேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு வீடுகளில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக பங்கேற்றனர்….

The post பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்த கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Stop ,Against ,WALBARA ,ALBARA ,Dinakaran ,
× RELATED சர்வதேச போதைப்பொருள் பயன்பாட்டுக்கு...