×

அதிமுக மாஜி அமைச்சரின் மைத்துனர் ஒதுக்கியரூ.3.50 கோடி முறைகேடு டெண்டர் அதிரடி ரத்து: பிடிஓ உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் இருந்து வருகிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சரும், நத்தம் தொகுதி எம்எல்ஏவுமான நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் ஆவார். நத்தம் ஒன்றியத்தில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் கண்ணன் நிதி ஒதுக்கியுள்ளார். இதில் ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு முறையாக ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கலெக்டர் பூங்கொடி, ஒன்றிய குழு தலைவர் கண்ணன் முறைகேடாக ஒதுக்கிய டெண்டரை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், அலுவலக மேலாளருமான நம்பி தேவி, கணக்காளர் சிவக்குமார், உதவியாளர் கனகலட்சுமி ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து உததரவிட்டார்.

The post அதிமுக மாஜி அமைச்சரின் மைத்துனர் ஒதுக்கியரூ.3.50 கோடி முறைகேடு டெண்டர் அதிரடி ரத்து: பிடிஓ உள்பட 4 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,PTO ,Natham ,Dindigul District ,Union ,Kannan ,MLA ,Natham Constituency ,Natham Viswanathan ,Dinakaran ,
× RELATED பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல்...