×

தீரன் சின்னமலைக்கு புகழ்வணக்கம்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலைக்கு புகழ்வணக்கம். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தீரன் சின்னமலைக்கு புகழ்வணக்கம் appeared first on Dinakaran.

Tags : Theeran Chinnamalai ,Chennai ,Theeran Chinnamalai Memorial Day ,Chennai, Guindy ,Mr. ,V.K. ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED சிறையில் முதல் வகுப்பு கோரிய யுவராஜ் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு