×

அரசு திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவது நிறுத்தம்: மின் வாரியம் தகவல்

சென்னை: அரசு திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதை நிறுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அரசு திட்ட பணிகளை செய்யும் சில ஒப்பந்ததாரர்கள், தற்காலிக மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை மாதந்தோறும் சரிவர செலுத்துவதில்லை. அரசு பணி நடக்கிறது என்பதால், அந்த இணைப்புகளில் மின் விநியோகத்தையும் அதிகாரிகள் துண்டிப்பது இல்லை. தற்காலிக இணைப்பிற்கு செலுத்திய டெபாசிட் தொகையை விட, மின் கட்டணம் அதிகம் இருக்கும் பட்சத்தில், பணிகளை முடித்து விட்டு, மின் கட்டணம் செலுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் சென்று விடுகின்றனர். இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு திட்ட பணிகளுக்கான தற்காலிக மின் இணைப்பை ஒப்பந்ததாரர்கள் பெயரில் வழங்கக் கூடாது. தற்காலிக இணைப்புக்கு பின், அந்த இணைப்பு யார் பெயரில் நிரந்தர இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதோ, அந்த அதிகாரி பதவியின் பெயரில் தான் வழங்கப்பட வேண்டும். இதனால், ஒப்பந்ததாரர்கள் செலுத்தாத மின் கட்டணம், சம்பந்தப்பட்ட அரசு துறையிடம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அரசு திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவது நிறுத்தம்: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,CHENNAI ,Tamil Nadu Electricity Board ,
× RELATED மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து இளைஞர்கள் ரகளை