- பட்டாம்பூச்சி
- குன்னர்
- ஊட்டி, சரி
- Kunnur
- நீலகிரி மாவட்டம்
- குன்னுார் பேரூராட்சி
- குன்னூர்
- தின மலர்
- பட்டாம்பூச்சி குவியல்
ஊட்டி, ஆக. 4: குன்னூரில் நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பழைய பள்ளி கட்டிடத்தை நகராட்சி துணைத்தலைவர் மற்றும் ஆணையாளர் ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக, குன்னூர் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, நூலகம் அமைப்பதற்கு நகராட்சி சார்பாக இடம் தேர்தெடுக்கப்பட்டது. 9 வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி நீண்ட நாட்களாக செயல்படாத நிலையில், அந்த பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றுவதற்கு நகராட்சி சார்பாக முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, நகராட்சி துணைத்தலைவர் வாசிம்ராஜா மற்றும் ஆணையாளர் சசிகலா ஆகியோர் அந்த இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்தப்பின் ஓரிரு மாதங்களில் நூலகம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி துணைத்தலைவர் தெரிவித்தார். உழவர் சந்தைக்கு அருகே உள்ள நூலகம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த பகுதி புதர்மண்டி கிடப்பதால் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அந்த நூலகத்திற்கு சென்று வர அச்சமடைந்து வருகின்றனர். தற்போது, நகர்பகுதியில் நூலகம் அமைப்பதற்கு நகராட்சியினர் முடிவு செய்துள்ள நிலையில் குன்னூர் நகர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
The post குன்னூரில் நவீன வசதிகளுடன் நூலக கட்டிடம் பட்டாம்பி அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட மண் குவியல் முன்னெடுப்பே மூலதனம் appeared first on Dinakaran.