×

ரெட்டியார்சத்திரம் தருமத்துப்பட்டியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ரெட்டியார்சத்திரம், ஆக. 4: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், செம்பட்டி-ராமபுரம் பிரதான சாலையில் தருமத்துப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊரிலிருந்து மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஊர்களுக்கு சொந்த வேலையாகவும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். ஆனால் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரது நலன் கருதி இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரெட்டியார்சத்திரம் தருமத்துப்பட்டியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rediyaschatram ,Darumathupatti ,Redyarchatram ,Sembatti ,Ramapuram ,Reddiarchatram ,Madurai ,Dindigul ,Ottanchatram ,
× RELATED ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?