×

சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இடமாற்றம்..!!

சென்னை: சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு துறை முதன்மை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை சுங்கத்துறையில் உள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் 7 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 2 மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து கடத்தல் சம்பவங்கள் நடந்தன. கடையை நடத்துபவர், ஊழியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி உட்பட 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது, தங்கம் கடத்தல் பின்னணியில் பாஜக பிரமுகர் ஒருவர் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக பிரமுகரின் சிபாரிசில் பரிசு பொருட்கள் நடத்தும் கடைக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி தந்ததும் தெரியவந்தது. கடத்தப்பட்ட 267 கிலோ தங்கத்தில், இன்னும் ஒரு கிலோ தங்கம் கூட கடத்தல்காரர்களிடம் இருந்து, சுங்கத்துறை மீட்கவில்லை. அதே நேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இடமாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Customs ,Central Revenue Intelligence Officers ,CHENNAI ,Chennai Customs and ,Central Revenue Intelligence Department ,Chennai Customs and Central Revenue Intelligence Department ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...