- யூனியன்
- வடக்கு மாவட்ட காங்கிரஸ்
- சமைபுரம் டோல்கேட்
- திருச்சி
- மக்களவை
- காங்கிரஸ்
- ரகுல்காண்டி
- ஜதி வாரியம்
- மத்திய அமைச்சர்
- அனுராக் தாகூர்
- ராகுல்
- யூனியன் அரசு
- தின மலர்
திருச்சி, ஆக.3: மக்களவையில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, நாடு முழுவதும் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தியை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் திருச்சிவடக்கு மாவட்ட தலைவர் கலை தலைமை வகித்தார்.
இதில் மத்திய அரசையும், அமைச்சர்களையும் கண்டித்து முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், கே.பி.ராஜா, மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் கணேசன், ஜோசப், இப்ராஹிம், வட்டார தலைவர்கள் பிரபு, நல்லேந்திரன், சாந்தகுமார், சுப்பிரமணி , மணிமாறன், செல்வம், அலெக்ஸாண்டர், மாணிக்கம், சுப்பிரமணி, ஐயமுத்து, பாட்ஷா, நகர செயலாளர்கள் இளங்கோவன், சேகர், வீரப்பன், ஆனந்தன், இளைஞர் காங்கிரஸ் பிரபாகரன். பாபு, ஜெயராஜ், மகளிர் அணி ராணி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.