×

இன்று ஆடிப்பெருக்கு விழா பூக்களின் விற்பனை அதிகரிப்பு

 

குளித்தலை, ஆக. 3: ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்தமாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து அம்மன் கோயில்களிலும் மற்ற கோயில்களிலும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (3ம் தேதி) ஆடிப்பெருக்கு விழா மற்றும் நாளை ஆடி அமாவாசை என்பதால் ஆற்றிலும் வீட்டிலும் வழிபாடு செய்வதற்காக பூக்கள் தேவைப்படுவதால் அதிக அளவில் பூக்கள் வந்து இறக்கப்பட்டது. இரு தினங்கள் வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் ஒரு சில பூக்களின் விலை ஏற்றமாக காணப்பட்டது. இருந்தாலும் ஆடி மாதம் ஆடிப்பெருக்கு அம்மாவாசை முக்கிய தினமாக வருவதால் அனைவரும் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

The post இன்று ஆடிப்பெருக்கு விழா பூக்களின் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Adipuru festival ,Aadi ,Amman ,Adiperku festival ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை