ஊட்டி, ஆக. 3: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வயநாடு பகுதியில் கொட்டி தீர்த்தது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று பெரிய நிலச்சரிவுகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படையின் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரல்மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், எதிர் திசையில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு குழு ஆற்றினை கடக்க சிப்லைன் அமைத்து எதிர் திசைக்கு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் இல்லாத நிலையில், கூடலூரை சேர்ந்த பெண் செவிலியர் சபீனாவின் துணிச்சலாக மருத்துவ சேவைக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றன.
The post வயநாட்டில் சிப்லைன் மூலம் சென்று சிகிச்சை அளித்த பெண் செவிலியருக்கு பாராட்டு appeared first on Dinakaran.