திருப்புத்தூர், ஆக.3: திருப்புத்தூர் பஸ்நிலையத்தில் நேற்று அதிகாலை, இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் நீண்ட வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அங்கு ரோந்து வந்த திருப்புத்தூர் டவுன் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம், பனையூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சசிகுமார் மகன் அர்ஜூணன்(22), பனையூர் அடக்கி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி மகன் ஆதிமூலம்(26) என்பது தெரிய வந்தது. இருவரும் மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே, கருங்காலக்குடி பெட்ரோல் பங்கில் வாளை காட்டி மிரட்டி பணத்தை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
The post பெட்ரோல் பங்கில் பணம் பறித்தவர்கள் கைது appeared first on Dinakaran.