×

மீஞ்சூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பொன்னேரி, ஆக. 3: மீஞ்சூர் ஒன்றியம் காட்டுப்பள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமை மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் காட்டுப்பள்ளி ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களாக தயார் செய்து உரிய அதிகாரிகளிடம் வழங்கினர். இதில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, வேளாண்துறை உள்ளிட்ட 14 துறைகளை சார்ந்த அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், குமார், துணைத்தலைவர் வினோதினி வினோத், ஊராட்சி செயலாளர் மகேந்திரன், மக்கள் நல பணியாளர் முருகானந்தம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Meenjur union ,Ponneri ,Kattupalli panchayat ,Meenjur ,Union ,Kattupalli ,Panchayat ,Meenjoor Union… ,Meenjoor Union ,
× RELATED பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!!