தூத்துக்குடி, ஆக. 3: சண்முகபுரம் பகுதியில் நடைபெற்ற வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் அமைத்தல், தார்சாலை, பேவர் பிளாக் சாலை, பூங்காக்கள், படிப்பகங்கள் அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post சண்முகபுரம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி appeared first on Dinakaran.