- அமைச்சர்
- மெய்யநாதன்
- சென்னை
- சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்
- சட்டப்பேரவை
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- தின மலர்
சென்னை: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 2021-22 வரையிலான அறிவிப்புகளின் தற்போதைய நிலை தலைமை செயலகத்தில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் சேகரிக்கும் திடக் கழிவுகளில் உள்ள நெகிழி கழிவுகளை முறையாக பிரித்து சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 கடற்கரை மாவட்டங்களிலும் நெகிழி கழிவுகள் கடலில் கலக்காமல் இருப்பதற்கும் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணையவழி கழிவு பரிமாற்றத் தளம் அமைத்தல், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் தொடர்பான பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் பெற வேண்டும், அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களிலும் நுண்ணுயிரியல் பகுப்பாய்வகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காற்று தர அடிப்படையிலான கண்காணிப்பிற்காக கருவிகளை தமிழ்நாடு உணர்திறன் முழுவதும் அமைப்பதற்கான முன்மொழிவினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்க வேண்டும். மண் பகுப்பாய்வு முறைகள் தொடர்பாக வாரியத்தின் அனைத்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post 14 கடற்கரை மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.