×

ரவுடி மனைவிக்கு கொலை மிரட்டல் அதிமுக பெண் நிர்வாகி கைது

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் கோகிலா (39). அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளரான இவர், கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான முன்னாள் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், பிரபல ரவுடியுமான ஜான் கென்னடி மனைவி ஆவார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி அதிமுக கட்சியின் வாட்ஸ்அப் குழுக்களில் கோகிலாவின் நடத்தையை பற்றி அவதூறு பரப்பியதுடன், அவரது சங்கை அறுக்காமல் விடக்கூடாது என புதுப்பேட்டையை சேர்ந்த அதிமுக மகளிர் அணி 63வது வட்ட செயலாளர் வாணி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாட்ஸ்அப் ஆதாரத்துடன் கோகிலா ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வாணி மீது புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிமுகவில் கோகிலாவின் வளர்ச்சியை தடுக்க வாணி அவதூறு பரப்பியது தெரியவந்தது. அதை தொடர்ந்து, போலீசார் அதிமுக மகளிர் அணி 63வது வட்ட செயலாளர் வாணியை நேற்று கைது செய்தனர்.

 

The post ரவுடி மனைவிக்கு கொலை மிரட்டல் அதிமுக பெண் நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Kokila ,Ayaarvilaku ,John Kennedy ,Arkadu Suresh ,
× RELATED அவதூறு வழக்கில் செப்.13ல் ஆஜராக...