×

பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்ல பேருந்து வசதி: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: சுப நிகழ்ச்சிகள், அறுபடை வீடு கோயில்கள், பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி செய்து தரப்படும். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும், இதர இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்து தரப்படும். www.tnstc.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

The post பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்ல பேருந்து வசதி: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,CHENNAI ,Managing Director ,Government Transport Corporation ,Arupadai Veedu Temples ,Dinakaran ,
× RELATED கிருஷ்ண ஜெயந்தி, தொடர் விடுமுறையை...