நீலகிரி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை போல நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலச்சரிவு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை ஆய்வு செய்ய இந்த வாரம் இந்திய புவியியல் வல்லுநர் குழு வரவுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை வல்லுநர் குழு ஆய்வு செய்யும். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
The post நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்பது வதந்தி: ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் appeared first on Dinakaran.