×

தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம்: ராகுல் காந்தி பதிவு

டெல்லி: தனது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வரலாம் என்று எக்ஸ் தளத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பதிவில் அவர் கூறியதாவது; நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு 2 பேருக்கு பிடிக்கவில்லை. சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு பிடிக்காததால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையின் வருகைக்காக தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

The post தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம்: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Tags : Enforcement agency ,Rahul Gandhi ,New Delhi ,Parliament ,Enforcement ,Dinakaran ,
× RELATED அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா...