×

முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பு; அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்: கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

அரியலூர், ஆக 2: அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா தொடக்கிவைத்தார். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். நிகழாண்டு குறுவட்ட போட்டிகளுக்கான ஏற்பாடுகளை குறுவட்ட செயலரும், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான சின்னதுரை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செய்துள்ளனர். போட்டி நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் அந்தோணிசாமி, இளவரசன், வீரபாண்டியன் உள்ளனர். கல்வி அலுவலர் நேசபிரபா பேசுகையில், விளையாட்டு உங்களை உற்சாகப்படுத்தும், தன்னம்பிக்கை வளர்க்கும் தோல்வியைக்கூட கடுமையான பயிற்சிகள் மூலம் வெற்றியாக மாற்றமுடியும். விளையாட்டின் மூலமும் உயர்ந்த இலக்கை அடைய முடியும் என்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலவலர் லெனின், பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் தடகளம், பூ பந்து, வளைகோல், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் அரியலூர் வட்டத்துக்குள் உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இந்த குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெறுவோர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

500 ஏக்கர் பயன்பெறும்
இது தொடர்பாக பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களுக்கான நீர்வளத் துறை செயற்பொறியாளர் வேல் முருகன் தெரிவித்ததாவது: தீரன் நகர் அருகே மருதை யாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் கட்டப் பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழியும் போது, சுற்றிலும் உள்ள 125 விவ சாயக் கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மறை முக மாக அப்பகுதியைச் சுற்றி லும் 500ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி கிடைக்கும். மேலும் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

The post முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பு; அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்: கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district playground ,Ariyalur ,District Education Officer ,Nesaprabha ,Ramesh ,CD ,Government of Sivalur ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...