×

பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: மாற்றுத்திறனாளி வீரருக்கு வெண்கல பதக்கம்

நாகப்பட்டினம், ஆக.2: தேசிய சப் ஜீனியர் மற்றும் ஜீனியர் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரரை கலெக்டர் ஆகாஷ் பாராட்டினார். பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 13வது தேசிய சப் ஜீனியர் மற்றும் ஜீனியர் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த வாரம் நடந்தது. இந்தப் போட்டியில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழக அணியில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பகுதியைச் சார்ந்த வீரசெல்வம் என்ற மாற்றுத்திறனாளி கலந்து கொண்டார். இவர் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான வீரசெல்வம் மாவட்ட கலெக்டர் ஆகாஷை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

The post பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: மாற்றுத்திறனாளி வீரருக்கு வெண்கல பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Para Athletics Championship ,Paralympics ,Nagapattinam ,Collector ,Akash ,Nagapattinam district ,National Sub Junior ,Junior Para Athletics Championship ,Sub Junior ,Bengaluru… ,Disabled ,Dinakaran ,
× RELATED பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து..!!