×

ஜூலையில் ஆன்லைனில் பதிவு செய்த 13 பேருந்து பயணிகளுக்கு பரிசு: போக்குவரத்து துறை தகவல்


சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில் ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 10,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஜுன் மாதம் முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா 10,000மும், இதர 10 பயணிகளுக்கு தலா 2,000மும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், ஜுலை மாதத்திற்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேற்று தேர்வு செய்தார், தேர்ந்தெடுக்கப்பட்ட, 13 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

The post ஜூலையில் ஆன்லைனில் பதிவு செய்த 13 பேருந்து பயணிகளுக்கு பரிசு: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Tamil Nadu Government Transport Corporations ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை...