×

திண்டிவனம் அருகே பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

 

விழுப்புரம், ஆக. 2: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரெட்டணை பகுதியைச் சேர்ந்தவர் சிவா(29). பிரபல சாராய வியாபாரியான இவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியே வரும் இவர் தொடர்ந்து இந்ததொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே கடந்த 1ம் தேதி சிவா வீட்டின் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது ரெட்டணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவாவின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக்சிவாச் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் பழனி நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து ரெட்டணை போலீசார் சிவாவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திண்டிவனம் அருகே பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Viluppuram, Aga ,Viluppuram district ,Shiva ,Redtanai ,Dindivanam, Viluppuram district ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் பத்திரப்பதிவு ஆபீசில்...