வருசநாடு, ஆக. 2: கண்டமனூர் அருகே பைக்கில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கண்டமனூர் அருகே டூவீலர் மூலம் கஞ்சா விற்பனை நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் சிறு பொட்டலங்களாக தயாரித்து அதனை வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் நபருக்கு நேரடியாக சென்று கஞ்சா விற்பனை செய்வதால் அதற்கான கூடுதல் தொகையும் வசூலித்து வந்துள்ளனர்.
அதன்படி கண்டமனூர் முதல் க.விலக்கு சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் இரண்டு கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கண்டமனூர் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தெப்பம்பட்டியை சேர்ந்த கூழ்மாயன் (42), தினேஷ்குமார் (30), பிராதுக்காரன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (21) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கண்டமனூர் அருகே பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.