- முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
- திண்டுக்கல் அ.வெள்ளோடு.
- திண்டுக்கல்
- முதல் அமைச்சர்
- ஏ வெள்ளோடு
- திண்டுக்கல் ஒன்றியம்
- தாம்பட்டி
- சிறுமலை
- திமுக தெற்கு ஒன்றியம்
- வெள்ளிமலை
- கோட்டாட்சியர்
- சக்திவேல் முகாம்
- முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
- திண்டுக்கல் அ.வெள்ளோடு
- தின மலர்
திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல் ஒன்றியம் ஏ.வெள்ளோடுவில் அணைப்பட்டி, சிறுமலை, ஏ.வெள்ளோடு ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமை வகித்தார். கோட்டாட்சியர் சக்திவேல் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இம்முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்டோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் 45க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் சோபியா ராணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் அலெக்ஸ், செந்தில்குமார், ரூபன், முன்னாள் ஊராட்சி செயலாளர் செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல் ஏ.வெள்ளோடுவில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.