×

ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் 7 ஆண்டில் 122 மாணவர்கள் தற்கொலை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் கடந்த 7 ஆண்டில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் கூறினார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 7  ஆண்டுகளில்  ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஎஸ்சிகள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களில் 122 பேர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த 24 மாணவர்களும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 3 மாணவர்களும், ஓபிசியைச் சேர்ந்த 41 மாணவர்களும், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் அடங்குவர். கல்வி நிறுவனங்கள் வாரியாக பார்த்தால் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி), இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) ஐந்து மாணவர்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 மாணவர்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் 37 மாணவர்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 மாணவர்களும் அடங்குவர்.கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் பாகுபாடு காட்டப்படுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவும், ஒன்றிய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஏற்ற வாசிப்பு, பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. ‘மனோதர்பன்’ என்ற பெயரில் கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டன’ என்று அவர் கூறினார்….

The post ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் 7 ஆண்டில் 122 மாணவர்கள் தற்கொலை: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : IIT ,IIM ,Union Minister ,New Delhi ,Union ,Dinakaran ,
× RELATED புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்க...