×

வாலாஜாபாத் பேரூராட்சியில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் பூங்கா: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய வரும் பழைய பேரூராட்சி அலுவலக பூங்காவை சீரமைத்து, சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம், தாலுகா அலுவலகம், வங்கிகள், பேரூராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. மேலும், பேரூராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் அருகாமையில் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஏற்கனவே, பேரூராட்சி அலுவலகம் இருந்த கட்டிடத்தில், தற்போது நூலகம் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிலையில் பழைய பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாலும், பூங்காவிற்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளன.

இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சியில் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், இங்குள்ள பழைய பேரூராட்சி அலுவலகம் எதிரே பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பூங்கா பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டபோது பராமரிக்கப்பட்டது. தற்போது, இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்களும், குடிமகன்களின் கூடாரமாகவும், கால்நடைகள் தஞ்சமடையும் இடமாகவும் மாறி உள்ளன. இந்த பூங்கா அமைந்துள்ள இடம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் – ஒரகடம் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது தற்போது இரவு நேரங்களில் இங்கு காதல் ஜோடிகளின் அத்து மிரல்கள் இந்த வழியாக செல்லும் பொது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

மேலும், இப்பகுதியில் உள்ள நூலகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. காலையில் நூலகத்திற்கு வரும் ஊழியர்கள் முகம் சுளித்து, இங்குள்ள காலி மது பாட்டில்களை அப்புறப்படுத்தும் நிலை காணப்படுகின்றன. இதுபோன்ற நிலையில் வாலாஜாபாத் காவல்துறையினர் இப்பகுதியில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அத்துமீறும் காதல் ஜோடிகள், மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து முதியவர்களும், குழந்தைகளும் பயன்படுத்தும் வகையி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் பேரூராட்சியில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் பூங்கா: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,Walajahabad ,Kanchipuram district ,Walajabad Municipal Corporation ,Walajabad ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில்...