- காங்கிரஸ் கட்சி
- பாஜக அரசு
- Kummidipoondi
- கும்மிடிபூண்டி பஜார்
- திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி
- மோடி அரசு
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியிர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பஜாரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜ மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில், மாநில துணை செயலாளர் சம்பத், பேரூர் வட்டார காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன், வட்டார தலைவர் பாபு, சசிகுமார், பெரியசாமி, பாதிரிவேடு போட்டோ செல்வம், சசிகுமார், அயநெல்லூர் சிவரெட்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசியபோது மோடி அரசு அவரை கொச்சைப்படுத்தியைதை கண்டித்தும், பட்ஜெட் தமிழ் நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட தர மறுக்கும் மோடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
The post பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.