திருத்தணி: கால்வாயில் தேங்கியிருந்த மழைநீரில் குழந்தை மூழ்கி பரிதாபமாக பலியானது. திருத்தணி அருகே சூரியநகரம் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன்(24). இவரது மனைவி நந்தினி(22) இந்த தம்பதிக்கு ஹேமாத்திரி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் கணவன் மனைவி தங்களது 2 வயது குழந்தையை அதே கிராமத்தில் வசிக்கும் சகோதரர் ஆனந்த் என்பவர் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். போன்று நேற்று கணவன் மனைவி இருவரும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.
அப்போது, வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. எனவே ஆனந்தன் மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வீடுகளுக்கு அருகில் உள்ள கால்வாயில் தேங்கியிருந்த மழைநீரில் குழந்தை மூழ்கி இறந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைதனர். இந்த சம்பம் குறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருத்தணி அருகே சோகம் கால்வாயில் மூழ்கி குழந்தை பலி appeared first on Dinakaran.