ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எஸ்எஸ்ஐ சித்திரவேலு உள்ளிட்ட 5 பேர் கைலிகள் மற்றும் டவுசர் அணிந்து ரோந்து சென்றுள்ளனர். இதில் போலீஸ்காரர் ஒருவர் கையில் அரிவாளுடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் மணல் கடத்தலை பிடிக்க சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறினர். அதற்கு, ‘‘அரிவாளுடன் ஏன் ஊருக்குள் வந்தீர்கள்’’ என கிராம மக்கள் கேட்டனர். மேலும் போலீசாரின் அடையாள அட்டைகளை வாங்கியும் பார்த்தனர். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post அரிவாளுடன் போலீஸ் ரோந்து? appeared first on Dinakaran.