ஸ்ரீபெரும்புதூர்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுங்சாலை, சுங்குவார்சத்திரம் அருகே நேற்று முன்தினம் இரவு சுங்குவார்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், பைக்கை சோதனையிட்டதில் கத்தி வைத்திருப்பது தெரியவந்தது.இதனையடுத்து, பைக்கில் கடத்தியுடன் வந்த சாலமங்கலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (22), நடுவீரப்பட்டை சேர்ந்த பிரணவ் (21). ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த பைக் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பைக்கில் கத்தியுடன் வந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.