×

காஞ்சி காளிகாம்பாள் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி நேற்று அன்ன வாகனத்தில் காளிகாம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக ரூ.1 கோடி செலவில் கோயில் திருப்பணி செய்யப்பட்டு, கடந்த ஜூன் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதன், தொடர்ச்சியாக மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து செய்யப்பட்டு, அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், மூலவருக்கும், உற்சவர் காளிகாம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் செய்யப்பட்டது. மாலை அம்மன் அன்னவாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் ரவி (எ) ஏழுமலை தலைமையில் திருப்பணி குழுவினர், அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

The post காஞ்சி காளிகாம்பாள் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Kanchi Kalikampal temple ,Kanchipuram ,Mandalabhishekam ,Adipeetha Parameshwari Kalikampal Temple ,Kalikampal ,Vethiula ,Anna Vahana ,Kancheepuram ,Adipeeda Parameshwari Kalikampal temple ,Maha Kumbabishekam ,Mandalabishekam ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம்...