×

10 யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு

மும்பை: அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார். இந்நிலையில், அவர் குறித்து தவறான வதந்தி ஒன்றை 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த யூடியூப் சேனல் தகவலில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்றை பரப்பின. இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஆராத்யா.

அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இது பற்றி ஐஸ்வர்யா ராய் கூறும்போது, ‘எனது மகள் என்ன தவறு செய்தார். அவரை பற்றி எப்படி அவதூறு பரப்பலாம். அதனால்தான் அவளது பெயரில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம்’ என்றார்.

The post 10 யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Rai ,YouTube ,Mumbai ,Amitabh Bachchan ,Abhishek Bachchan ,Aaradhya Bachchan ,Aishwarya ,Roy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டீப்பேக் வீடியோ பிரச்னை;...