- புதுச்சேரி சட்டசபை
- வயநாடு
- புதுச்சேரி
- புதுச்சேரி சட்டமன்றத் திட்டக் கூட்டம்
- கவர்னர்
- இ.
- பி ராதகிருஷ்ணன்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் உரையுடன் நேற்று துவங்கியது. இந்த நிலையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையும், விவாதமும் நடைபெற்றன. அவை துவங்கியதும் சபாநாயகர் செல்வம் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்பு 2 நிமிடம் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
The post புதுச்சேரி சட்டசபையில் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு இரங்கல் appeared first on Dinakaran.