- விஜி
- ராஜேந்திரன் எம்.எல்.ஏ.
- முதல் அமைச்சர்
- முகாம்
- கலைகாடுகுப்பம்
- திருத்தணி
- அர்க்காடுகுப்பம்
- வி.ஜி.ராஜேந்திரன்
- சட்டமன்ற உறுப்பினர்
- திட்ட முகாம்
- தின மலர்
திருத்தணி: ஆற்காடுகுப்பம் கிராமத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் கிராமத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ராமாபுரம், ஆற்காடுகுப்பம், நாபளூர், மாமண்டூர், அருங்குளம் உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இதில் 15 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களின் மனுக்களை பெற்று, ஆன்லைனில் பதிவு செய்தனர்.
இம்முகாமில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். பின்னர், அம்மனுக்கள்மீது ஆய்வு நடத்தி, விரைவில் உரிய தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தினார். மேலும், தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் வட்டாட்சியர் மலர்விழி, திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், நிர்வாகிகள் கமலநாதன், யுவராஜ், திலக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஆற்காடுகுப்பம் கிராமத்தில் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.