- அமைச்சர் திட்ட முகாம்
- முசரவாக்
- சட்டமன்ற உறுப்பினர்
- எஹிலரசன்
- காஞ்சிபுரம்
- பஞ்சாயத்துடன்
- உடன் முதல்வர் திட்ட முகாம்
- முசரவாக்கம் ஊராட்சி
- காஞ்சிபுரம் ஒன்றியம்
- காஞ்சிபுரம் எம்எல்ஏ…
- முதல் அமைச்சர்
- திட்ட முகாம்
- முஷர்வாக்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் 2ம் கட்டமாக ”மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று காஞ்சிபுரம் ஒன்றியம் முசரவாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். பின்னர், துறை சார்ந்த அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டா, மின் இணைப்பு ஆணை, வீடுகள் பழுது நீக்கும் பணிக்காக பணி ஆணை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகளை எம்எல்ஏ வழங்கினார். முசரவாக்கம், பெரும்பாக்கம், கிளார், தாமல், முத்துவேடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்றனர். முகாமில், ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடிகுமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை கழக பேச்சாளர் விஷால் தமிழரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post முசரவாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார் appeared first on Dinakaran.