×

மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 90 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி கடனுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ஆ.க.சிவமலர், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெய முன்னிலை வகித்தனர். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, 90 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். அந்தவகையில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகள் மூலம் நரிக்குறவர்களுக்கு ரூ.1.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

இதுபோல் மகளிர் சுயஉதவி குழு கடனாக ரூ.183.32 லட்சம், கல்வி கடனாக ரூ.5.30 லட்சம், கைம்பெண் கடனாக ரூ.3.50 லட்சம், மகளிர் தொழில் முனைவோர் கடனாக ரூ.3.25 லட்சம், மாற்றுத்திறனாளி கடனாக ரூ.2.50 லட்சம், பண்ணை சாரா கடனாக ரூ.2.75 லட்சம், சிறுவணிக கடனாக ரூ.10.05 லட்சம், வீடு அடமான கடனாக ரூ.14 லட்சம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கடனாக ரூ.50 ஆயிரம், மத்திய காலகடனாக ரூ.3 லட்சம் என 90 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர், பொதுமேலாளர், துறை அலுவலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

The post மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 90 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி கடனுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,Kanchipuram ,Kanchipuram Collector ,Office ,Public Relations ,Forum ,Kalachelvi Mohan ,Kanchipuram Central Co- ,Bank ,A.K.Sivamalar ,Kanchipuram Zonal Co-operative Societies Co ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலைகளுக்கு பீக் ஹவர்...