×

விஜய், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் டிவிட்டர் ப்ளூ டிக் நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: டிவிட்டரில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ட்விட்டர் பயனர்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை எலான் மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்க கட்டணம் என எட்டுத்ததற்கெல்லாம் கட்டணம் என்கிற நிர்பந்தத்தை கொண்டு வந்திருக்கிறார். டிவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்குக்கு மாதம் தோறும் இந்திய ரூபாயில் ரூ. 900 கட்டண சந்தா செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டிவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்ததால், டிவிட்டர் கட்டணம் செலுத்த அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள், ஷாருக்கான், சல்மான் கான், மோகன்லால், மம்மூட்டி, ராம்சரன், சிரஞ்சீவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஜய், ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது. இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது. மாத சந்தா கட்டியதால் நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்டோரின் ப்ளூ டிக் நீக்கப்படவில்லை. இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலானதோடு ட்விட்டரிலும் #BlueTick என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

The post விஜய், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் டிவிட்டர் ப்ளூ டிக் நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Rajini ,CHENNAI ,Hollywood ,Kollywood ,Twitter ,Elon Musk ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...