×
Saravana Stores

316 ஏக்கரில் அமைந்த பிரமாண்ட ஏரி; வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ரூ.4.73 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் வடுவூர், தென்பாதி, வடபாதி, மேல்பாதி, சாத் தனூர், எடமேலையூர், எடகீழையூர், கட்டக்குடி, கருவாக்குறிச்சி, பேரையூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 1,336 ஏக்கர் நேரடியாகவும், 9,200 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் இனப் பெருக்கத்திற்காக பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. மேலும், பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகை களை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வடுவூர் ஏரி யில் பாதுகாக் கப்பட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்த ஏரியின் சுற்றுப்புற எல்லைப் பகுதிகளில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுழல் உணர் திறன் மண்டலமாக அறிவி க்கப் பட்டுள்ளது. இந்த பகுதிக்குள் சாலை பணிகள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செய்யப்படுத்த வேண்டும் என்றால் வனத்துறை வசம் முன் அனுமதி வாங்க வேண்டும்.இந்த சூழலில் இந்த சுற்றுச்சுழல் உணர் திறன் மண்டலத்தின் வழியே சென் னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் ஏரி மற்றும் பறவைகள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ஏரியில் தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக ரூ.4.73 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியின் மூலம் வடுவூர் ஏரியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பற வைகள் சரணாலயத்தில் முதல்கட்ட மாக பறவைகள் தங்க ஏதுவாக ஏற் கனவே அமைக்கப்பட்டுள்ள பழைய மண் திட்டுகளை சீரமை க்கும் பணி, ஏரியில் படர்ந் துள்ள களைச் செடிகள் ஆன ஆகாய தாமரைகள, ஐபோர் மியா மற்றும் வேலி கருவேல மரங் களை முற்றிலும் அகற்றி ஏரியின் நீர் கொள்ளளவு பரப்பை அதிகரிக்கும் பணி, பறவைகளின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும், ஏரியின் கரைகள் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் நேற்று பார்வையிட்டு பணி தொடர்பாகவும், பறவைகள் சரணாலயத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறி த்தும் மாவட்ட வன அலுவலர்  காந்த்துடன் ஆலோசனை செய்தார். ஆய்வின் போது, வன சரக அலுவலர் கோமதி, வனவர் சுரே ஷ்குமார், வன காப் பாளர் வீரக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post 316 ஏக்கரில் அமைந்த பிரமாண்ட ஏரி; வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ரூ.4.73 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vaduvur Bird Sanctuary ,Minister ,TRP Raja ,Mannargudi ,Vaduvur ,Tiruvarur district ,Tenpadi ,Vadapadi ,Melpadi ,Saath Thanur ,Edamelaiyur ,Edagiyur ,Khattakudi ,Karuvakurichi ,Beraiyur ,Dinakaran ,
× RELATED பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்...