×

பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை: உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

டெல்லி: பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 7 நீதிபதிகள் அமர்வில் பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என, 2005ல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு ரத்தானது.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின்தங்கிய அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார். இதனை அடித்து அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

The post பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை: உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Bela Trivedi ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...