திருச்சி, ஆக.1: திருச்சி மாநகாில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ரவுடியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பாலக்கரை வோ்ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மே.13ம் தேதி போதை மாத்திரைகளை இளைஞா்களுக்கு விற்பனை செய்த பாலக்கரை கூனிபஜார் பகுதியை சோ்ந்த சாித்திர பதிவேடு குற்றவாளி பாண்டி (27), மற்றும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டி மீது பாலக்கரை காவல் நிலையத்தில் வழிப்பறி செய்தததாக 4 வழக்குகளும்,
அடிதடியில் ஈடுப்பட்டதாக 2 வழக்களும் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 1 வழக்கு, தில்லைநகா் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கு உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தொியவந்தது. எனவே, தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையினை பாிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைத்தனர்.
The post போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ் appeared first on Dinakaran.