×

கும்பகோணம் அருகே திருநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வீட்டு மனை பட்டா

கும்பகோணம், ஆக.1: மக்களுடன் முதல்வர் திட்டமுகாமில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. கும்பகோணம் அருகே திருநல்லூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருநல்லூர் ஊராட்சியில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமை வகித்தார். முகாமில், நீரத்தநல்லூர், தேவனாஞ்சேரி, அகராத்தூர், அத்தியூர், உத்தமதாணி மற்றும் திருநல்லூர் ஆகிய 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அந்ததந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நீரத்தநல்லூர் ஊராட்சி, மேலாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோவிலாச்சேரி ஊராட்சி மன்ற தலைவரும், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான சுதாகர், வட்டாட்சியர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மார்க்கெட் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் சாமிநாதன், வெங்கடேசன், மரகதம் கோவிந்தராஜ், ஜெயசீலா அறிவழகன், பானுமதி கலியமூர்த்தி, ராஜாராம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணம் அருகே திருநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வீட்டு மனை பட்டா appeared first on Dinakaran.

Tags : Thirunallur ,Kumbakonam ,Chief Minister ,Tirunallur ,Mahalakshmi ,Kumbakonam… ,
× RELATED கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை செயல்பாடுகள் தீவிரம்