×

கீழாத்தூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்: முதல்வர் காணொளியில் திறந்து வைத்தார்; அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டார்

புதுக்கோட்டை, ஆக. 1: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீழாத்தூரில் அரசுசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இக்கல்லூரியானது, கடந்த 29-ம் தேதியில் இருந்து புதிய கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது. இக்கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், கல்லூரிக்கு சுற்றுச்சுவர் விரைவில் கட்டப்படும் எனவும், கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வந்து செல்லும் நேரங்களில் கூடுதல் நகர் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேலும், கல்லூரி வளாகத்தை பசுஞ்சோலையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அப்போது, கல்லூரி முதல்வர் விஜயா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கீழாத்தூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்: முதல்வர் காணொளியில் திறந்து வைத்தார்; அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Geezathur Govt College ,CM ,Minister Meiyanathan ,Pudukottai ,Chief Minister ,M.K.Stalin ,Government College ,Alangudi ,Keezathur ,Geezathur Government College ,Minister ,Meiyanathan ,
× RELATED தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ...